Advertisment

bangladesh train accident

வங்கதேசத்தில் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து. இந்த விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர்.

Advertisment

வங்கதேசம் நாட்டின் டாக்கா மாகாணம் கிஷோர்கஞ்ச் மாவட்டம், பைரப் ரயில் நிலையத்தில் இருந்து இன்று (23ம் தேதி) மாலை விரைவு ரயில் ஒன்று புறப்பட்டது. அந்த ரயில் சில நிமிடங்களில் வேறு தண்டவாளத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. மாற்றம் செய்யப்பட்ட ரயில், அதன் பாதைக்கு முழுமையாக மாறுவதற்குள் எதிரேவந்த சரக்கு ரயில் விரைவு ரயிலின் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் தற்போதுவரை 15 நபர்கள் சம்பவிடத்திலேயே பலியாகினர். மேலும், 100க்கும் மேற்பட்ட பயணிகள் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.