/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/flight-std.jpg)
வங்கதேச அரசுக்கு சொந்தமான விமான நிறுவனத்தின் ஒரு விமானம், 148 பயணிகளுடன், தலைநகர் டாக்காவில் இருந்து துபாய்க்கு நேற்று சென்றபோது நடுவானில் ஹைஜாக் செய்யப்பட்டது.
டாக்காவிலிருந்து புறப்பட்டு சிட்டகிராம் விமான நிலையத்தில் தரை இறங்கிய அந்த விமானம் அங்கிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில், பயணிகளுடன் அமர்ந்திருந்த ஒரு மர்ம நபர் திடீரென துப்பாக்கியுடன் எழுந்துவிமானத்தை கடத்துவதாக அறிவித்தார். மேலும் பைலட் அறைக்குள் செல்ல முயற்சித்த அவர் பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.
இந்நிலையில் விமானம் மீண்டும் சிட்டகிராம் விமான நிலையத்துக்கு திருப்பப்பட்டது. அங்கு தரையிறக்கப்பட்டவுடன் பயணிகள் அவசர பாதை வழியாக வெளியேற்றப்பட்டனர். அதன்பின் விமானத்தின் உள்ளே நுழைந்த அதிரடி படையினர், விமானத்தை கடத்திய நபரை சுட்டு கொன்றனர்.
இந்நிலையில் அவர் அந்த விமானத்தை கடத்தியதற்கான காரணத்தை அந்த விமான ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதன்படி தனது மனைவியுடன் சண்டை ஏற்பட்டதாகவும்,அது சம்பந்தமாக பிரதமர் ஷேக் ஹசீனாவை பார்க்க வேண்டும் எனவும் அவன் கூறியுள்ளான். ஆனால் அவன் விமானத்தை கடத்த வேறு ஏதும் காரணம் இருந்ததா என்பது குறித்து அந்நாட்டு புலனாய்வு துறை விசாரணை நடத்தி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)