ADVERTISEMENT

ஏழுநாள் ஊரடங்கு அறிவித்த அண்டை நாடு... தொழிற்சாலைகளை மூடாததற்கு வினோத காரணம்!

05:23 PM Apr 03, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்திலும், கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த வியாழன் காலை 8 மணிமுதல், வெள்ளிக்கிழமை காலை 8 மணிவரையிலான 24 மணிநேரத்தில், 6 ஆயிரத்து 830 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதியானது. இது அதற்கு முந்தைய 24 மணிநேரத்தில் கரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கையை விட 23.28 சதவீதம் அதிகமாகும்.

இதனையடுத்து ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் ஏழு நாட்களுக்கு ஊரடங்கை அமல்படுத்த வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும் தொழிற்சாலைகள் மற்றும் ஆலைகள் தொடர்ந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த அந்தநாட்டு அரசு, தொழிற்சாலைகள் மட்டும் ஆலைகளை மூடினால், அதில் வேலை செய்பவர்கள் வீடுகளுக்குச் செல்லத் தொடங்கி விடுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT