இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கரோனாதொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்திலும், கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த வியாழன் காலை 8 மணிமுதல், வெள்ளிக்கிழமை காலை 8 மணிவரையிலான24 மணிநேரத்தில், 6 ஆயிரத்து 830 பேருக்கு புதிதாக கரோனாதொற்று உறுதியானது. இது அதற்கு முந்தைய 24 மணிநேரத்தில்கரோனாஉறுதியானவர்களின்எண்ணிக்கையைவிட 23.28 சதவீதம் அதிகமாகும்.
இதனையடுத்துஏப்ரல் 5 ஆம்தேதி முதல் ஏழு நாட்களுக்கு ஊரடங்கை அமல்படுத்த வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது. இருப்பினும் தொழிற்சாலைகள் மற்றும் ஆலைகள் தொடர்ந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்த அந்தநாட்டுஅரசு, தொழிற்சாலைகள் மட்டும் ஆலைகளை மூடினால், அதில் வேலை செய்பவர்கள் வீடுகளுக்குச் செல்லத் தொடங்கி விடுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.