Advertisment

சர்வதேச அமைச்சர்கள் மாநாடு நடக்கும் பாங்காக்கில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு... பரபரப்பில் உலகநாடுகள்...

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இன்று காலை குண்டுவெடிப்பு நடந்தது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

bangkok blast

Advertisment

தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் ஆசியன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவின் பாம்பியோ உள்பட ஆசியன் நாட்டு தலைவர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் பாங்காக்கில் உள்ள மூன்று இடங்களில் சிறிய ரக குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குண்டுவெடிப்பில், அப்பகுதியில் பணியாற்றிய 3 துப்புரவு தொழிலாளிகள் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு வெடித்தவை நாட்டு வெடிகுண்டுகளாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

bangkok thailand
இதையும் படியுங்கள்
Subscribe