Advertisment

துப்பாக்கி கலாச்சாரத்துக்கு முடிவு கட்டுங்கள்! - அமெரிக்காவை அதிரவைத்த மாணவர் பேரணி

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவரக்கோரியும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தக் கோரியும், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் வெள்ளை மாளிகையை நோக்கி பேரணியாக சென்று முற்றுகையிட்டுள்ளனர்.

Advertisment

Never

கடந்த வாரம் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மார்ஜொரி ஸ்டோன்மேன் டக்ளஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 குழந்தைகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாணவர்கள் ஒன்றுதிரண்டு துப்பாக்கிக் கலாச்சாரத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்தனர்.

Advertisment

Never

துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பித்த டக்ளஸ் பள்ளி மாணவர்கள் உட்பட, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டனர். மாணவர்கள் பேரணிக்கு தலைமை தாங்கிய நிர்வாகிகள் சிலருடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், துப்பாக்கி பயன்படுத்துவதன் மீதான சட்டத்தை கடுமையாக்கும் மாணவர்களின் கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். மேலும், தீவிரவாதத் தாக்குதல் உள்ளிட்ட அசம்பாவித சமயங்களில் தற்காத்துக் கொள்ள ஆசிரியர்கள் துப்பாக்கி எடுத்துச் செல்வதற்கான பரிந்துரையையும் அவர் முன்வைத்தார்.

Nver

இந்தப் பேரணியில் சென்ற மாணவர்கள் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எதிராகவும், மாணவர்கள் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையிலும், பதாகைகளை வைத்திருந்தனர். ஃப்ளோரிடாவில் உயிரிழந்த மாணவர்களின் பெயர்களை வாசித்தபோது, துப்பாக்கிக்கு பயந்தது போல் மாணவர்கள் கையை உயர்த்திய நிகழ்வு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

Florida trump
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe