/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cvb_10.jpg)
இலங்கையில் மாடு வெட்ட தடை விதிக்கப்படுவதாகவும், மாட்டு இறைச்சி இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை இரண்டு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இலங்கையிலும் அந்த பாதிப்பு இருந்து வரும் சூழலில் தற்போது அந்நாட்டு பிரதமர் மகிந்தாராஜபக்ஷே புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இலங்கையில் மாடு வெட்ட தடை விதிக்கப்பட இருப்பதாகவும், வெளிநாடுகளில் இருந்து மாட்டிறைச்சியை வாங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இலங்கை அரசு இதுவரை அறிவிக்கவில்லை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)