ADVERTISEMENT

பலூசிஸ்தானில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு...

04:53 PM Aug 16, 2019 | kirubahar@nakk…

பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பலூசிஸ்தானின் குவெட்டா பகுதிக்கு அருகில் அமைந்துள்ள குச்லாக் என்ற நகரில் உள்ள மசூதியில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 4 பேர் பலியாகியுள்ளதாகவும், மேலும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டுவெடிப்பை நடத்தியது யார், எதற்காக இந்த குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT