Skip to main content

பஹ்ரைன் நாட்டில் புதிய பிரதமர் நியமனம்...

Published on 12/11/2020 | Edited on 12/11/2020

 

Bahrain's Crown Prince Appointed as New Prime Minister

 

பஹ்ரைன் நாட்டின் புதிய பிரதமராக இளவரசர் சல்மான் பின் ஹமீத் அல் கலீஃபா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

 

1783 ஆம் ஆண்டு முதல் பஹ்ரைனை ஆண்டுவரும் அல் கலீஃபா குடும்பத்தில் கடந்த 1935 ஆம் ஆண்டு பிறந்த கலீஃபா பின் சல்மான் அல் கலீஃபா, 1970 முதல் பஹ்ரைன் பிரதமராக இருந்து வந்தார். உலகிலேயே நீண்ட காலம் ஒரு நாட்டின் பிரதமராகத் தொடர்ந்து பதவிவகித்தவர் என்ற பெருமையை உடைய இவர், உடல்நிலை சரியில்லாததால் அமெரிக்காவின் மாயோ கிளினிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்தச் சூழலில் சிகிச்சை பலனின்றி, 84 வயதான அவர், நேற்று காலமானார். அமெரிக்காவிலிருந்து அவரது உடல் பஹ்ரைன் கொண்டுவரப்பட்ட பின்னர், இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பஹ்ரைன் நாட்டின் புதிய பிரதமராக இளவரசர் சல்மான் பின் ஹமீத் அல் கலீஃபா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் உறவைத் துண்டித்த பஹ்ரைன்!

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

Bahrain recall envoy to Israel

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 25 நாட்களுக்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. 

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத் தொடர்பு சேவைகளை அழித்து உலகத்தில் இருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை 8,900 அப்பாவி பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஐ.நா ஊழியர்கள் 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதில் 70 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

 

இதனைத் தொடர்ந்து, காசாவிற்குள் நுழைந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் இனி வரும் காலங்களில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த மாதம் 31 ஆம் தேதி, பாலஸ்தீனத்தில் உள்ள ஜபாலியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் ஜபாலியாவில் உள்ள அனைத்து கட்டடங்களும் தரைமட்டம் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இஸ்ரேல் தாக்குதலில் காயமடைந்தவர்கள் ஜபாலியாவிற்கு தஞ்சமடைந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்தத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

இந்த நிலையில், காசா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேலுக்கான தனது தூதரை திரும்பப் பெறுவதாக பஹ்ரைன் நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் சபை தெரிவித்துள்ளது. மேலும், அதில் இஸ்ரேல் நாட்டுடனான பொருளாதார உறவுகளையும் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இது குறித்து பஹ்ரைன் நாடாளுமன்றம், ‘பாலஸ்தீனிய பிரச்சனை மற்றும் பாலஸ்தீனிய மக்களின் நியாயமான உரிமைகளுக்கும் ஆதரவாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்’ என்று கூறியுள்ளது. 

 

 

Next Story

“அம்மாவ தெரியுதாமா....அழகி அம்மாமா...” பஹ்ரைனில் விபத்தில் சிக்கிய மகனை மீட்ட தாயின் கண்ணீர்

Published on 16/04/2023 | Edited on 16/04/2023

 

Mother's tears after rescuing son from accident in Bahrain

 

குடும்ப வறுமை காரணமாக பஹ்ரைன் நாட்டிற்கு வேலைக்கு சென்று அங்கு விபத்தில் அடிபட்டு சிகிச்சைக்குப் பின் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட மகனை கண்ட தாய் கண்ணீர் விட்டு கதறியது காண்போரை உருகச் செய்தது.

 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவு அழகி. இத்தம்பதியினருக்கு 25 வயதில் வீரபாண்டி, 22 வயதில் அழகு பெருமாள் 2 மகன்கள் உள்ளனர்.

 

சுப்பையா கட்டிடத் தொழிலாளி. சுப்பையாவிற்கு ஏற்பட்ட விபத்தால் அவர் தொடர்ந்து வேலைக்கு செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்நிலையில் 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த மூத்தமகனான வீரபாண்டி குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்குச் செல்ல முடிவெடுத்து கடந்தாண்டு ஜனவரி மாதம் பக்ரைன் நாட்டில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

 

கடந்த டிசம்பர் மாதம் வீரபாண்டிக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக ஆபத்தான நிலையில் பஹ்ரைன் நாட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மகனுக்கு விபத்து ஏற்பட்டதை அறிந்த பெற்றோர் மகனை மீட்டுக்கொண்டு வர போராடிய நிலையில், வெளிநாடு தமிழர் நலன் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வீரபாண்டி இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டார்.

 

4 மாத போராட்டத்திற்குப் பிறகு விமானம் மூலம் வீரபாண்டியை சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னை வந்திறங்கிய வீரபாண்டியை கண்டதும் அவரது தாயார் பதறி அடித்து ஓடி வந்து, அம்மாவ தெரியுதாமா.... அழகி அம்மாமா... அம்மாட்ட வந்துட்ட இனிமே பயப்படாத மா... அம்மா நல்லா பாத்துப்பேன்ல... என கண்ணீர் விட்டு அழுதது காண்போரை நெகிழச்செய்தது.