Advertisment

குறட்டை விட்ட தந்தை... கோபமான இரண்டு வயது மகள் - வைரலாகும் வீடியோ!

மனிதர்களில் பெரும்பாலானவர்கள் குறட்டை விட்டு தூங்குவது என்பது இயற்கையான ஒரு நிகழ்வு. தற்போதெல்லாம் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் குறைட்டை விட்டு தூங்குகிறார்கள். வெளிநாடுகளில் எல்லாம் கணவன் மனைவி இடையே குறட்டை விடுவது பெரிய சிக்கலாகி விவகாரத்து வரைக்கும் போகும் நிகழ்வுகளும் நடந்துள்ளன. இந்நிலையில் இணையத்தில் தற்போது ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஒருவர் குறைட்டை விட்டபடி தூங்குகிறார்.

Advertisment

அவருக்கு அருகில் அவருடைய இரண்டு வயது குழந்தை தூங்குகிறது. தந்தையின் குறட்டை சத்தத்தின் காரணமாக அந்த குழந்தை விழித்துக் கொள்கிறது. ஒரு அளவுக்கு மேல் கோபமான அந்த குழந்தை தன்னுடைய காலில் போட்டிருந்த சாக்ஸை கழட்டி அவருடைய வாயில் வைத்து திணிக்கின்றது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தந்தைக்கு மகள் கொடுத்த தண்டனை என்று நெட்டிசன்கள் அதற்கு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

VIRAL
இதையும் படியுங்கள்
Subscribe