Advertisment

பிரிட்டன் அரண்மனையில் தமிழர்களுக்கான விருது வழங்கும் விழா

eng

Advertisment

ஐரோப்பிய யூனியனின் 24 ஆம் உச்சி மாநாடு பிரிட்டனில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் பொழுது பிரிட்டனின் நேஷனல் ஹெல்த் சர்வீஸ் எனப்படும் மருத்துவத் துறையின் தேசிய நிர்வாகமும், உலக தமிழர் பேரவையும் இணைந்து விருது விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. அந்த விழாவில் மருத்துவ துறையில் சாதித்த தமிழக மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்தப் பிரம்மாண்ட விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் 14 -ம் தேதி பிரிட்டனில் உள்ள ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மணையில் நடைபெறுகிறது. இது பற்றி உலக தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த விழாவின் மூலம் மிகத் தனித்துவம் வாய்ந்த இந்தியா - பிரிட்டன் உறவினை மேம்படுத்துவதுடன் பல புதிய வாய்ப்புகளும் உருவாகும் என்று நம்பிக்கை கொள்கிறோம்' என கூறப்பட்டுள்ளது.

award function eu Tamilians
இதையும் படியுங்கள்
Subscribe