Advertisment

அவென்ஜர்ஸ் "தனோஸ்" கனடாவில் கைது !!!

அவென்ஜர்ஸ் இன்ஃபினிட்டி வார் உலகம்முழுவதும் 6,500 கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது. இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்துவருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் வரும் கதாபாத்திரத்தை கனடாவில் உள்ள டொராண்டோ போலீஸ் கைது செய்துள்ளது.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

ஆம் இன்ஃபினிட்டி வாரில் வரும் "தனோஸ்" வில்லன் கதாபாத்திரம்போல் வேடமிட்டுசாலையில் சுற்றித்திரிந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் "தனோஸ்" போலவே உடை, நடை, முகமூடி, கையில் மேஜிக்கல் ஸ்டோன்ஸ் என்று இருந்தார். அவரது முகமூடியை திறந்துபார்த்தால் 42 வயதான பிராங் கோராஸி இருந்தார். கைது செய்தபுகைப்படத்தை டொராண்டோ போலீசார் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

avengers thanos arrest

Advertisment

இதுகுறித்து கோராஸி கூறுகையில் " நான் இந்த உடையை அணிந்து சாலையில் நடக்கும்பொழுது அனைவரும் என்னிடம் வந்து செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர் எனக்கு அது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார். இவரை கைது செய்த புகைப்படம் தற்போது அதிகமாக சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.

marvels avengers
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe