இம்ரான் கான், இவர் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பாகிஸ்தானின் அரசியல்வாதியாக இருப்பவர். இவரின் முதல் மனைவி ரெஹம் கான், தற்போது அவர் ஒரு சுயசரிதை எழுதி வெளிவருவதாகஉள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் மற்றும் அவரது மனைவி,ரெஹம் கானின் முதல் கணவர் இஜாஸ் ரெக்மான், இங்கிலாந்து தொழிலதிபர் செய்யது புஹாரி மற்றும் பாகிஸ்தான் ஊடக ஒருங்கிணைப்பாளர் அணில கவாஜா போன்றவர்களை பற்றி இதில் குறைகூறி எழுதப்பட்டுள்ளதாக சொல்கின்றனர். மேலும் அவர்களின் பாலியல் வாழ்கையையும் இதில் சொல்லப்பட்டிருப்பதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புத்தகத்தின் 402 மற்றும் 572 பக்கங்களை மட்டும் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. அதில் வாசிம் அக்ரம் மற்றும் அவரது மனைவியை குறித்து எழுதப்பட்டுள்ளது.