Advertisment

"என் இதயத்தில் கத்தியால் குத்திக்கொள்ள விரும்புகிறேன்"... உலகை உலுக்கிய ஒன்பது வயது சிறுவனின் கண்ணீர்....

தனது சக மாணவர்களால் கிண்டல் ஏளனம் செய்யப்பட்ட ஒன்பது வயது சிறுவன், "நான் இறந்துவிடுகிறேன்" எனக்கூறி அழும் காட்சி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

australian student Quaden Bayles video

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த குவாடன் எனும் ஒன்பது வயது சிறுவன் குள்ளமான உடல் தோற்றத்தை கொண்டிருப்பதால், அந்த சிறுவனுடன் படிக்கும் மாணவர்கள் அந்த சிறுவனை கேலி செய்துள்ளனர். தொடர் கிண்டல்களால் மனமுடைந்த அந்த சிறுவன், தனது தாயிடம் கண்ணீர்விட்டு அழுதபடி, "எனக்கு ஒரு கயிறு கொடுங்கள் அம்மா. நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்" என கூறியுள்ளான். இதனை வீடியோ எடுத்த அந்த சிறுவனின் தாய், தனது மகனின் உடல் அமைப்பு குறித்த கிண்டல் அவனை எந்த அளவு பாதித்திருக்கிறது என தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த வீடியோவில் அழுதபடியே பேசிய அந்த சிறுவன், "எனக்கு ஒரு கயிறு கொடுங்கள் அம்மா. நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். எனது இதயத்தில் கத்தியால் குத்திக்கொள்ள விரும்புகிறேன். என்னை யாராவது கொன்றுவிட வேண்டும் என விரும்புகிறேன்" எனக்கூறி கட்டுப்படுத்த முடியாமல் அழுதுள்ளான்.

இந்த விடியோவை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த அந்த சிறுவனின் தாய், "ஒரு தாயாக எனது பொறுப்பிலிருந்து நான் தவறிவிட்டதாக கருதுகிறேன். நமது கல்வித் திட்டமும் தோல்வி அடைந்துவிட்டதாகவே கருதுகிறேன். சக மாணவர்களை கேலி செய்வதால் எத்தகைய விளைவு ஏற்படும் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள். குவாடனின் உயரத்தை கேலி செய்து அவன் தலையில் ஒரு மாணவன் அடிப்பதை நானே நேரில் பார்த்தேன். ஆனால் பள்ளியில் புகார் செய்து பிரச்சனை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக காரில் ஓடிவந்து ஏறிய அவன், தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அழத் தொடங்கிவிட்டான்" என தெரிவித்துள்ளார். கேலி செய்யப்பட்டதால் மனம் வெதும்பி அழும் இந்த சிறுவனின் வீடியோ உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Australia
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe