தனது மூன்று குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார் முன்னாள் ரக்பி வீரரான ரோவான் சார்லஸ் பாக்ஸ்டர்.

australian rugby player family incident

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

நியூசிலாந்தை சேர்ந்த முன்னாள் ரக்பி விளையாட்டு வீரரான ரோவான் சார்லஸ் பாக்ஸ்டர், தனது மனைவி ஹன்னா மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு ரோவான் மற்றும் அவரது மனைவி இருவரும் பிரிந்தனர். அதன்பின் குழந்தைகள் மூவரும் ஹன்னாவுடன் வாழ்ந்து வந்தனர்.

இந்த சூழலில் ஹன்னா, தனது 3 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பிரிஸ்பேன் நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு காரில் சென்றார். அப்போது அந்த காரை வழிமறித்து ஏறிய ரோவான், மனைவி ஹன்னாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் கையில் கொண்டுவந்திருந்த எரிபொருளை குழந்தைகள் மற்றும் ஹன்னா மீது ஊற்றி தீ வைத்தார். பின்னர் அவரும் கத்தியால் தன்னை குத்திகொண்டுள்ளார். இந்த சம்பவத்தில் அவர்களின் 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ரோவானும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த நிலையில், ஹன்னா மட்டும் பலத்த தீக்காயங்களோடு சிகிச்சை பெற்று வருகிறார். ரோவான், தனது மனைவியுடனான கருத்து வேறுபாடு காரணமாக தனது மூன்று குழந்தைகளையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர சம்பவத்திற்கு அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசன் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் ஹன்னாவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.