Advertisment

உயிர்த்தியாகம் செய்த தந்தை... பதக்கத்தை பெற்ற ஒன்றரை வயது மகன்...

கடந்த மூன்று மாதங்களாக ஆஸ்திரேலியா முழுவதும் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு பலத்த பொருட்சேதமும், உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது.

Advertisment

australian bushfire fire fighter passed away

கடந்த மூன்று மாதமாக தெற்கு சவூத்வேல்ஸ் மாகாணத்தில் தொடங்கிய காட்டுத்தீயை அணைக்க ஆஸ்திரேலிய அரசு கடுமையாக போராடி வருகிறது. இருப்பினும் வறண்ட வானிலை மற்றும் காற்றின் வேகம் காரணமாக காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவு வேகமாக பரவி வருகிறது. தெற்கு சவூத்வேல்ஸ் மாகாணத்தில் தொடங்கிய காட்டுத்தீ தற்போது மெல்ஃபோர்ன் நகர் வரை பரவி உள்ளது. இந்தக் காட்டுத் தீயால் இதுவரை 1300 வீடுகள் இரையாகியுள்ளன. சுமார் 5.5 மில்லியன் ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த காட்டுத் தீயினால் இதுவரை 18 பேர் பலியாகி உள்ள நிலையில் 12 பேர் மாயமாகி உள்ளனர்.

இந்த சூழலில், கடந்த வாரம் 32 வயதான ஜெஃப்ரி கிட்டன், அவரது நண்பர்களுடன் சேர்ந்து காட்டுத்தீயை அணைப்பதற்காக போராடிய போது, மரம் சரிந்து விழுந்து பலியானார். இந்த நிலையில் கிட்டனின் உயிர்த் தியாகத்தை கவுரவப்படுத்தும் வகையில், அவரது இறுதி சடங்கில், கிட்டனின் ஒன்றரை வயது மகன் ஹார்வே கிட்டனுக்கு உயரிய கவுரவப் பதக்கம் அணிவித்து ஆஸ்திரேலிய தீயணைப்புத் துறை பெருமைப்படுத்தியது. தனது தந்தையின் இழப்பை பற்றி புரிந்துக்கொள்ள முடியாத அந்த சிறுவன், தீயணைப்புத் துறை தலைமை அதிகாரியிடமிருந்து பதக்கத்தைப் பெற்ற காட்சி அங்கிருந்த பலரையும் கலங்க செய்தது. கிட்டனின் இறுதி சடங்கில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்களும் பங்கேற்றனர்.

Australia bushfire
இதையும் படியுங்கள்
Subscribe