ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக வரலாறு காணாத வகையில் கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயில் இதுவரை 3000 ஏக்கர் காடுகள் எரிந்து நாசமாயின. காடுகளில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான மிருகங்கள் பலியாகின. வனங்களில் உள்ள மருத்து குணம் கொண்ட பல்வேறு வகையான தாவரங்கள், மரங்கள் ஆகியவை கூண்டோடு அழிந்தன. இந்த காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த கங்காரு ஒன்றின் புகைப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் பார்ப்பவர்களின் மனதை உறைய வைக்கும் வகையில் அமைத்திருந்தது. மேலும், இந்த புகைப்படத்தை நெட்டிசன்கள் வைரலாக்கி வரும் நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
Australia is on fire. Nearly half a billion animals have been killed with more than 14.5 million acres burned. This is climate change.#PrayForAustralia
— Mahnoor (@Letmesarcastic) January 5, 2020
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதுவரை இந்த காட்டுத்தீயில் எவ்வளவு உயிரினங்கள் இறந்துள்ளன என்பது குறித்த ஆய்வுகளை வன விலங்குகள் அமைப்புகள் கடந்த சில நாட்களாக நடத்தின. இந்த ஆய்வில் தற்போது அதிர்ச்சியான முடிவுகள் தெரியவந்துள்ளன. அதாவது இந்த காட்டுத்தீயில் மட்டும் 50 கோடிக்கும் அதிகமான உயிரினங்கள் இறந்திருக்க வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது. பெரிய விலங்குகள் பெரும்பாலும் தீயில் இருந்து தப்பித்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த காட்டுத்தீயின் கொடூரத்தினை அறிந்துகொள்ளும் வகையில் அதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இந்த காட்சிகள் இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.