புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. அந்நாட்டில் கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்ட பலத்த பொருட்சேதமும், உயிர் சேதமும் ஏற்பட்டது. பல இடங்களில் தற்போதும் தீ ஏற்படுவது சகஜமாக உள்ளது.
எனவே முன் ஏற்பாடாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது யாரும் பட்டாசு வெடிக்க கூடாது என்று அந்நாட்டு அரத உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே புகை மூட்டத்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதால் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
Follow Us