கடந்த மூன்று மாதங்களாக ஆஸ்திரேலியா முழுவதும் பல்வேறு இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுபலத்த பொருட்சேதமும், உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விக்டோரியாவின் கடலோர நகரமான மல்லக்கூட்டாவில் பரவிய காட்டுத்தீயால் அப்பகுதி முழுவதும் சிவப்பு நிறமாக காட்சியளிக்கிறது.

Advertisment

austalian bushfire ruined new year eve in victoria

கடந்த மூன்று மாதமாக தெற்கு சவூத்வேல்ஸ் மாகாணத்தில் தொடங்கிய காட்டுத்தீயை அணைக்க ஆஸ்திரேலிய அரசு கடுமையாக போராடி வருகிறது. இருப்பினும் வறண்ட வானிலை மற்றும் காற்றின் வேகம் காரணமாக காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவு வேகமாக பரவி வருகிறது. தெற்கு சவூத்வேல்ஸ் மாகாணத்தில் தொடங்கிய காட்டுத்தீ தற்போது மெல்ஃபோர்ன் நகர் வரை பரவி உள்ளது.

Advertisment

இந்நிலையில், விக்டோரியாவின் கடலோர நகரமான மல்லக்கூட்டாவில் பரவிய பயங்கர தீயினால், அப்பகுதியில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கடற்கரையில் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் புகைமூட்டத்தில் சிக்கினர். மேலும் அதிக அளவிலான தீயின் காரணமாக அப்பகுதி முழுவதும் சிவப்பு நிறமாக காட்சியளிக்கிறது. அங்கு சிக்கிய மக்கள் ராணுவ ஹெலிகாப்டர்களால் மீட்கப்பட்டு உள்ளனர். காட்டுத்தீ தொடர்ந்து பரவி வருவதால் ஆஸ்திரேலியா மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர். இதனால் பொதுமக்களிடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.