Advertisment

இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானியர்களால் பரபரப்பு...

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது.

Advertisment

attack on indian consulate in london

மத்திய அரசின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் சர்வதேச அளவிலும் இந்தியாவிற்கு எதிரே பல நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்தது. அனால் பாகிஸ்தானின் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இந்த நிலையில் கடந்த மாதம் இந்திய சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தை பாகிஸ்தானியர்கள் முற்றுகையிட்டனர். இதனால் லண்டன் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே பாகிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று மீண்டும் போராட்டம் நடத்தினர். இதனால் தூதரக வளாகம் தாக்குதலுக்கு உள்ளானது. ஆரம்பத்தில் இந்திய அரசுக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர்.

Advertisment

இதனால் தூதரக அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டம் தொடர்பான தகவல் மற்றும் வீடியோ பதிவை இந்திய தூதரகம் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானியர்கள் இந்த தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

jammu and kashmir london Pakistan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe