Advertisment

புவியை தாக்கவரும் குறுங்கோள்கள்... சீனாவின் அதிரடி திட்டம்!

Asteroids to attack Earth ... China's action plan!

Advertisment

பூமியை நோக்கி வரும் குறுங்கோள்களை தாக்கி அழிக்கும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி வருவதாக சீன விண்வெளி ஆய்வு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. பூமியை காப்பாற்றும் முதன்மையான அமைப்பாக இது இருக்கும் என சீன விண்வெளி அமைப்பின் துணைத் தலைவர் உயான்குவா தெரிவித்திருக்கிறார். வரும் 2025 ஆம் ஆண்டு அச்சுறுத்தலாக வரப்போகும் குறுங்கோளை இடைமறித்து தாக்குவது தான் தங்களது முதல் இலக்குஎனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுங்கோள்களின் வேகம், தொலைவு, புவியை நெருங்கும் நேரம் ஆகியவற்றைக் கண்டறிந்து முன்னதாகவே அதனை இடைமறித்துத் தாக்குவதற்கான மென்பொருளையும் அதற்கான ஒத்திகை அமைப்புகளையும் தாங்கள்கொண்டிருப்பதாக அந்த விண்வெளி மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

earth china Space
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe