சுற்றுசூழலில் அதீத அக்கறைக் கொண்ட லண்டன், தற்போது மின்சாரத்தில் இயங்கக்கூடிய இரட்டை அடுக்கு பேருந்தை தனது வீதிகளில் உலாவவிட திட்டமிட்டுள்ளது. அதற்கான தயாரிப்பு உரிமத்தை இந்திய தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்டின் கிளை நிறுவனம் 'ஆப்டரி' என்ற நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

Advertisment

ashok leyland

முதற்கட்டமாக 31 மின் இரட்டை அடுக்கு பேருந்துகளை 43 ( ஃபிரியர்ன் பார்னெட் - லண்டன் பிரிட்ஜ்) மற்றும் 134 (நார்த் ஃபிஞ்ச்லி - டோட்டன்ஹம் கோர்ட் ரோடு ) ஆகிய இரண்டு வழித்தடங்களில் அடுத்த கோடை காலத்துக்குள் இயக்க திட்டமிட்டுள்ளது லண்டன்.

Advertisment

இதுகுறித்து அசோக் லேலண்டின் நிர்வாக இயக்குனரான வினோத் கே. தாசரி "இந்த தொழில்நுட்ப வளர்ச்சி, லண்டன் நகரத்துக்கு மட்டும் பெருமை இல்லை நமது நாடும் பெருமைக்கொள்ள வேண்டிய விஷயம். மேலும் இந்த வளர்ச்சி, வெறும் இலாப நோக்கில் மட்டும் இல்லாமல் நமது தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் அடித்தளமிடும்." என்று குறிப்பிட்டார்.