donald trump

Advertisment

ஈராக் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி, அமெரிக்காவின் ஆளில்லா ராணுவ விமானம் மூலம் கடந்தாண்டு ஜனவரிமாதம் கொல்லப்பட்டார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், "அமெரிக்காவின் ராஜாங்கஅதிகாரிகள் மற்றும் ராணுவவீரர்கள் மீது உடனடி மற்றும் மோசமான தாக்குதல் நடத்த காசிம் சுலைமானிதிட்டமிட்டிருந்தார். நாங்கள் அவரைப் பிடித்துக் கொன்றுவிட்டோம்" எனக் கூறியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, அமெரிக்கப்படைகளைத் தீவிரவாதிகள் என அறிவித்த ஈராக், தங்கள் நாட்டிலுள்ள அமெரிக்காவின் ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது. மேலும், அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல் குறித்து நீதிமன்ற விசாரணையும் நடைபெற்று வந்தது.

இந்தநிலையில், அந்த வழக்கைவிசாரித்த நீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை கைது செய்யவாரண்ட்பிறப்பித்துள்ளது.இந்தத் தகவலை ஈராக்நீதித்துறைதெரிவித்துள்ளது.