ஏவுகணை தாக்குதலில் 100 பேர் பலி... வளைகுடா பகுதியில் பதட்டம்...

அமெரிக்கா ஈரான் இடையேயான பதட்டமான சூழல் நிலவி வரும் சூழலில் வளைகுடா பகுதியான ஏமன் நாட்டில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 100 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

army base attacked in yemen

ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் இருந்து கிழக்கே 170 கி.மீ தொலைவில் உள்ள மத்திய மாரீப் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாமில் உள்ள மசூதியில் மாலைநேர பிரார்த்தனை நடைபெற்ற போது, ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் 100 வீரர்கள் கொல்லப்பட்டதாக தாக்குதல் வெளியாகியுள்ளது.

2014 முதல் நடைபெற்று வரும் ஏமன் உள்நாட்டு போரில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் உதவி புரிந்து வருகிறது. அதேபோல ஏமன் அரசாங்கத்திற்கு சவுதி அரசு ஆதரவாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 100 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் ஏமன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Saudi yeman
இதையும் படியுங்கள்
Subscribe