apple

Advertisment

உலகின் மதிப்புமிக்க நிறுவனம் என்ற அந்தஸ்தை இழந்து உள்ளதுமுன்னணி நிறுவனமான 'ஆப்பிள்'. அவ்விடத்தை சவுதி அரேபிய அரசின் எரிபொருள் உற்பத்தி நிறுவனமான 'சவுதி அராம்கோ' கைப்பற்றியுள்ளது.

உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்திய கரோனா வைரஸ் பரவல் காரணமாக சுகாதார சீர்கேடு, பொதுமுடக்கம் உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே அடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால் தொழில்நுட்ப சாதனங்களை மக்கள் அதிகம் பயன்படுத்தும் சூழல் அதிகம் ஏற்பட்டது. அதேநேரத்தில் முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு சந்தை மதிப்பு 2 ட்ரில்லியன் டாலர்களிலிருந்து 3 டிரில்லியன் டாலராக அதிகரித்தது. ஆனால் தற்பொழுது உலகளவில் கரோனா பாதிப்புகள் குறைந்து மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பி வருவதால் 'ஆப்பிள்' நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

aramco

Advertisment

இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு சந்தை மதிப்பு 2.37 டிரில்லியன் டாலராக சரிந்துள்ளது. இதே நேரத்தில் ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. இதனால் சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்தின் பங்கு சந்தை மதிப்பு 2.42 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதனால் உலகின் மதிப்புமிக்க நிறுவனம் என்ற அந்தஸ்தை 'அராம்கோ' கைப்பற்றியுள்ளது.