ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடன் 1992-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தவர் வடிவமைப்பாளர் ஜானி ஐவ். இவர் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ மேக், ஐபோன், ஐ வாட்ச், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவற்றை வடிவமைப்பதில் ஜானி ஐவ் முக்கியப் பங்காற்றினார். ஒரே ஒரு ஹோம் பட்டனுடன் ஐபோனைத் தயாரித்தது இவரது திறமைக்கு எடுத்துக்காட்டாகும். ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட முதல் மொபைல் இதுவாகும். இந்நிலையில் இந்த ஆண்டிற்குள் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகுவதாக ஜானி ஐவ் அறிவித்துள்ளார்.

Advertisment

APPLE COMPANY PRODUCT DESIGNER JONY IVE RESIGN SHOCK APPLE COMPANY

ஒரு புதிய வடிவமைப்பு நிறுவனத்தை ஜானி ஐவ் தொடங்கவுள்ளதாகவும், அதில் ஆப்பிள் நிறுவனமும் ஒரு வாடிக்கையாளராக இருக்கும் என்றும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜானி ஐவ் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து விலகுவதாக அறிவித்த சில மணி நேரத்தில் அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு சந்தை மதிப்பு குறையத் தொடங்கியது.