அமெரிக்காவின் பிரபல தொற்றுநோய் நிபுணரான அந்தோணி பவுசி கரோனா வைரசை முழுவதுமாக ஒழிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும் போது "தடுப்பூசிகள் மூலம் கரோனவை கொஞ்சம் கட்டுப்படுத்தலாம். பூமியிலிருந்து கரோனா வைரசை அழித்து விடுவது என்பது சாத்தியமற்றது. இது மற்ற வைரசை விட வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக இருக்கிறது. பொது சுகாதார நடவடிக்கையில் இனி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 2021க்குள் ஓரளவிற்கு நிலைமை கட்டுக்குள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன்" என்றார்.