உருக்குலைந்த மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்

Another earthquake hits devastated Myanmar

இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் 28.03.2025 அன்று இந்திய நேரப்படி காலை 11:55 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதே சமயம் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சமடைந்தனர்.

அதன் பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் 6.4 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. இவ்வாறாக 7 முறை மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில் ஏற்பட்ட இந்த பேரிடர் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

தற்போது வரை மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 3000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மியான்மர் உருக்குலைந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

earthquake Myanmar
இதையும் படியுங்கள்
Subscribe