Advertisment

"வெறும் 11780 ஓட்டு வேணும்" - தேர்தல் அதிகாரியை எச்சரித்த ட்ரம்ப்! 

trump

Advertisment

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவம்பர்மாதம் நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் ட்ரம்ப் குடியரசு கட்சிசார்பாகவும், அவரைஎதிர்த்து ஜனநாயக கட்சியின்ஜோபைடனும்போட்டியிட்டனர். இந்த வாக்குப்பதிவு தொடங்கியது முதலே, தேர்தலில்முறைகேடு நடப்பதாக டிரம்ப்குற்றசாட்டுகளை எழுப்பி வருகிறார்.

நீதிமன்ற வழக்குகள், மறுவாக்குஎண்ணிக்கை ஆகியவற்றுக்குப் பிறகு ஜோபைடன்அதிபர் தேர்தலில்வெற்றிபெற்றதாகஅறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஜோபைடனின் வெற்றிக்குஎதிராகபல்வேறு வழக்குகள் தொடங்கப்பட்டன. இதுவரை அவ்வாறு தொடரப்பட்ட60 வழக்குகளை அந்நாட்டு நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன.

அமெரிக்காவின் அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு வரும் 6ஆம் தேதி, அந்நாட்டுநாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கவுள்ளது. இந்நிலையில்ஜார்ஜியா மாகாணத்தில், தான் வெற்றி பெற்றதாகதேர்தல் முடிவுகளை மாற்றுமாறு ட்ரம்ப் பேசுவதாக கூறப்படும் ஆடியோஒன்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்த ஆடியோவில் ட்ரம்ப், ஜார்ஜியா மாகாணத்தில் தான் வெற்றிபெற்றதாக தேர்தல் முடிவுகளை மாற்றுமாறுஜார்ஜியா மாகாணசெயலாளரும்தேர்தல் உயர் அதிகாரியுமான பிராட் ராஃபென்ஸ்பெர்கரிடம் கூறுகிறார்.அதற்குபிராட் ராஃபென்ஸ்பெர்கர் மறுப்பு தெரிவிக்கவே, ஜார்ஜியா மாகாணத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், எனவே சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும், அதுபிராட் ராஃபென்ஸ்பெர்கருக்கும் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் ட்ரம்ப் எச்சரிக்கிறார்.

Advertisment

இதன்பிறகு ட்ரம்ப், தான் வெறும் 11,780 வாக்குகளைப் பெற விரும்புவதாகபிராட் ராஃபென்ஸ்பெர்கரிடம் கூறுகிறார். அதற்குபிராட் ராஃபென்ஸ்பெர்கர், தங்களிடம்உள்ள தரவுகள் சரியானவை என நம்புவதாகவும், இந்த விவகாரம் குறித்து நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்றுகூறுகிறார்.

அமெரிக்க ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள இந்த ஆடியோ, பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. எனினும் இதுகுறித்து ட்ரம்ப் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

Joe Biden PRESIDENT DONALD TRUMP PRESIDENT ELECTION
இதையும் படியுங்கள்
Subscribe