Android

காது கேட்கும் திறனற்றவர்களுக்கு உதவும் வகையில் ஆண்டிராய்ட்அசத்தல் முயற்சி ஒன்றை எடுத்துள்ளது.

Advertisment

ஆண்டிராய்ட் ஃபோன் இன்று உலகம் முழுவதும் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது. பயனாளர்களுக்கு உதவும் வகையிலும், பயன்படுத்தும் முறையை எளிமைப்படுத்தும் வகையிலும் ஆண்டிராய்ட் புதிய, புதிய அப்டேட்ஸ்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் முழுமையாக காது கேட்கும் திறனற்றவர்கள் மற்றும் செவிக்குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் வகையில் புதிய அப்டேட்ஒன்றை வெளியிட்டுள்ளது.

Advertisment

முதற்கட்டமாக இதில் நாய் குறைத்தல், கதவு தட்டும் சத்தம், அவசர கால அபாயச்சங்கு உள்ளிட்ட 10 விதமான சத்தங்கள் வகைப்படுத்தப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன. கால்ட் சவுண்ட் நோடிஃபிகேஷன்(called Sound Notifications) என்ற வசதியை ஆன் செய்து வைக்கும்போது, இந்தபத்து விதமான சத்தங்கள் எழுந்தால், மொபைல் போன் அதிர்வடையவோ அல்லது டார்ச் ஒளியை அடிக்கவோ செய்யும். இதற்கு இணைய வசதி தேவையில்லை எனக்கூறப்பட்டுள்ளது.