Advertisment

விண்வெளியிலிருந்து பூமிக்கு திரும்பிய அமெரிக்காவின் மர்ம விண்கலம்...

இரண்டு ஆண்டுகால விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவின் மர்ம விண்கலமான எக்ஸ்-37பி பூமிக்கு திரும்பியுள்ளது.

Advertisment

americas space craft x37b arrives at florida

கடந்த 2017 ஆம் ஆண்டு எக்ஸ்-37பி ரக விண்கலம் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இது எந்த காரணத்திற்காக அனுப்பப்பட்டது, விண்வெளியில் என்ன ஆய்வு செய்தது என நாசா தரப்பில் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படாமலேயே உள்ளது. விண்வெளியில் 780 நாட்கள் ஆய்வுப் பயணத்தை முடித்துக் கொண்டு, எக்ஸ்-37பி விண்கலம் நாசாவுக்கு சொந்தமான புளோரிடா மாநிலத்தில் உள்ள கென்னடி விண்வெளி மைய இறங்குதளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தரையிறங்கியது. இதன் ஆய்வு குறித்து ரகசியம் காத்துவரும் நாசா, எக்ஸ்-37-பி ரகத்தின் அடுத்த விண்கலத்தை அடுத்த ஆண்டு விண்வெளிக்கு அனுப்பவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment

spacex NASA
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe