சிரியாவில் அமெரிக்க ஆதரவுடன் தனி நாட்டிற்காக போராடி வந்தது குர்து இன போராளிகள் குழு.

Advertisment

american troop leaves syria

சமீபத்தில் அமெரிக்கா, சிரியாவிலிருந்து தனது ராணுவத்தை திரும்ப பெற்ற நிலையில், குர்து மக்கள் ஆதரவில்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில் துருக்கி அதிபர் அறிவுறுத்தலின் பேரில், துருக்கி ராணுவம் சிரியா நாட்டில் உள்ள குர்து போராளிகள் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டது. இந்த தாக்குதலில் 600 க்கும் மேற்பட்ட குர்து இன மக்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், சிரியாவை விட்டு வெளியேறிய அமெரிக்கப் படைகள் மீது அழுகிய பழங்களை வீசி தங்களது எதிர்ப்பை குர்து மக்கள் வெளிப்படுத்தினர்.

Advertisment

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக குர்துகளின் போருக்கு அமெரிக்கா ஆதரவளித்த நிலையில், தங்கள் மீதான துருக்கியின் தாக்குதலை கண்டிக்காமல் படைகளை வாபஸ் பெற்றது குர்து படைகளிடையே அமெரிக்கா மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் விளைவாகவே சிரியாவை விட்டு வெளியேறிய அமெரிக்க ராணுவத்தினர் மீது குர்து மக்கள் அழுகிய பழங்களை வீசி அடித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.