குழந்தைகளுக்கு ஆபத்து..? ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு ரூ.56,000 கோடி அபராதம்...

நூற்றாண்டு பழமை வாய்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் ரூ.56,000 கோடி அபராதம் விதித்துள்ளது.

american court puts penalty for johnson and johnson

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தயாரிப்பான ‘ரிஸ்பெரிடால்’ என்ற மருந்துப் பொருளில் ஆண் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப்பொருட்கள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக நடத்தப்பட்ட விசாரணையின் போது, ‘ரிஸ்பெரிடால் மருந்தால் ஆண் குழந்தைகளுக்கு பெண்களை போன்று மார்பக வளர்ச்சி அமைவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து இந்த விசாரணையின் முடிவில் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பில டெல்பியா நீதிமன்றம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.56,000 கோடி அபராதம் விதித்தது. இந்த மருந்து தொடர்பாக இதுவரை 13,000 புகார்கள் வந்துள்ள நிலையில், அந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

America baby
இதையும் படியுங்கள்
Subscribe