joe biden

அமெரிக்காவில் தற்போது நடந்து முடிந்துள்ள அதிபர் தேர்தலில், ஜோ பைடன்அடுத்த அதிபராகதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், அதிபர் தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்கும் நாடாளுமன்றகூட்டம் இன்று (07/01/2021) தொடங்கியது.

Advertisment

அப்போது டிரம்பின் ஆதரவாளர்கள் குழு ஒன்று, அமெரிக்கநாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டது. இந்த வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்தனர். அதன்பிறகு வன்முறையாளர்கள், நாடாளுமன்றகட்டடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

Advertisment

அதன்பிறகு நாடாளுமன்றகூட்டம்மீண்டும் தொடங்கியது. இதில் ஜோ பைடனின்வெற்றிக்கு எதிராக, டிரம்ப்எழுப்பியஆட்சேபனைகள் நிராகரிக்கப்பட்டு, அமெரிக்காவின் புதிய அதிபராகதேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின்வெற்றியை உறுதி செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் 46வது அதிபராகபதவியேற்கவுள்ளார் ஜோபைடன்.