American Airlines flight Reagan National Airport in Washington DC incident

அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில், ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தை நோக்கி இராணுவ ஹெலிகாப்டர் சென்று கொண்டிருந்தது. அப்போது சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று, இந்த ராணுவ ஹெலிகாப்டருடன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய விமானம் பொடொமாக் ஆற்றில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விபத்தில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Advertisment

அதே சமயம் மீட்புப்பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதனையடுத்து, ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம், விமான நிலையத்தில் அனைத்து விமானங்களின் புறப்பாடுகள் மற்றும் தரையிறக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) ஆகியவை விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Advertisment

இந்த குழுவினர் விமான விபத்து நிகழ்ந்தது எப்படி? என அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். நடுவானில் ராணுவ ஹெலிகாப்டருடன் பயணிகள் விமானம் மோதிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.