வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு!

farmers

மத்திய அரசின்வேளாண் சட்டங்களுக்கு எதிராகவிவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தியஎதிர்க்கட்சிகள் நாடளுமன்றத்தின் இரு அவைகளிலும், வேளாண் சட்டங்களுக்கு கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்கவெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ஹேலி ஸ்டீவன்ஸ், வேளாண்சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்விதமாக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "பொதுவாக, இந்தியச் சந்தைகளின் செயல்திறனை அதிகரிக்கும், தனியார் முதலீட்டைஈர்க்கும்நடவடிக்கைகளை அமெரிக்காவரவேற்கிறது" எனக் கூறியுள்ளார்.

விவசாயிகளின்போராட்டம் பற்றி, "அமைதியான போராட்டங்கள் எந்தவொரு வளர்ந்து வரும் ஜனநாயகத்திற்கும் அடையாளமாக இருப்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இந்திய உச்சநீதிமன்றமும் அதையே கூறியுள்ளது" எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் எந்தவொருபிரச்சனையும் பேசி தீர்க்கப்பட வேண்டும் என்றும் ஹேலி ஸ்டீவன்ஸ் தெரிவித்துள்ளார்.

America farm bill Farmers
இதையும் படியுங்கள்
Subscribe