ADVERTISEMENT

உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறும் முடிவு... ஐ.நா. சபையில் கடிதம் சமர்ப்பித்த அமெரிக்கா...

01:20 PM Jul 08, 2020 | kirubahar@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக ஐ.நா. சபையில் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது அமெரிக்கா.

உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், அண்மையில் அந்த அமைப்புக்கு அமெரிக்கா வழங்கிவந்த நிதியுதவியை நிறுத்துவதாக அவர் அறிவித்தார். மேலும், கரோனா விவகாரத்தில் தொடர்ந்து சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படும் உலக சுகாதார அமைப்பின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பிலிருந்து விலக்கப் போவதாகக் கடந்த ஏப்ரல் மாதம் ட்ரம்ப் அறிவித்தார். இந்நிலையில் உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறுவதற்கான அறிவிக்கை கடிதத்தை ஐ.நா. சபையில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ளது. இதனை ஐ.நா. சபையும் உறுதி செய்துள்ளது.

"உலக சுகாதார அமைப்பிலிருந்து அடுத்த ஓராண்டில் வெளியேறுகிறோம் என்பதற்கான முறைப்படியான கடிதத்தை அமெரிக்கா ஜூலை 6, 2020-ல் வழங்கியுள்ளது. இந்தக் கடிதம் அளிக்கப்பட்டு ஓர் ஆண்டில், அதாவது 2021-ஆம் ஆண்டு ஜூலை 6-ஆம் தேதி முதல் அமெரிக்காவின் இந்த முடிவு நடைமுறைக்கு வரும்" என ஐ.நா. பொதுச்செயலாளருக்கான செய்தித்தொடர்பாளர் ஸ்டானே துஜாரிக் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT