அமெரிக்காவில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து; 99 பேர் நிலை குறித்து அச்சம்!

MIAMI BUILDING

அமெரிக்காவின்புளோரிடா மகாணத்தில், மியாமி கடற்கரை அருகே 12 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள்ளார். 102 பேர் கட்டிடத்தில் இருந்து தப்பித்துள்ளனர். அதேநேரத்தில் சுமார் 99 பேரின் நிலை என்ன ஆனது என்றே தெரியாத நிலை நீடித்து வருகிறது.

இந்த 99 பேரும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும்என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த 12 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு இதுவரை காரணம் என்னவென்று தெரியவில்லை.

40 வருடங்களுக்கு ஒரு முறை,புளோரிடா மகாண கட்டிடங்களின் கட்டமைப்பும், மின்சார வசதிகளும்பாதுகாப்பிற்காக மறு சீரமைப்பு செய்யப்பட்டு, பாதுகாப்பு சான்றிதழ் பெற வேண்டும். அதற்கான நடைமுறைகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த 12 மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

America building Florida
இதையும் படியுங்கள்
Subscribe