/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ishwarya-art.jpg)
அமெரிக்காவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய இளம்பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திற்குஉட்பட்ட டல்லாஸ் நகரில் அமைந்துள்ள பிரபலமான வணிக வளாகம் ஒன்றில் கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படிஅன்று மாலை சுமார் 3.30 மணியளவில் திடீரென்று மர்ம நபர் ஒருவர், வணிக வளாகத்தில் இருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் துப்பாக்கி சூடு சம்பவத்தில்ஈடுபட்ட நபர் மவுரிஹொ ஹர்ஷியா (வயது 33) என்பது தெரியவந்தது.
இந்நிலையில்இந்த துப்பாக்கிச் சூட்டில்உயிரிழந்த 8 பேரில் ஒருவர் தெலுங்கானாமாநிலம்ஐதராபாத்தை சேர்ந்த ஐஸ்வர்யா தட்டிகொண்டா (வயது 27) என்பது தெரியவந்துள்ளது.இவர் டெக்சாஸில் உள்ள ஒரு நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகபொறியாளராக பணியாற்றி வந்தவர். இவரின் தந்தை ஹைதராபாத்தில் உள்ள சரூர்நகர் மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வருகிறார். ஐஸ்வர்யாவின் உடலைசொந்த ஊருக்குகொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைபெண்ணின் பெற்றோர்செய்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)