Skip to main content

சீனாவில் இனப்படுகொலை - அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிக்கை!

Published on 31/03/2021 | Edited on 31/03/2021

 

america declares genocide in xinjiang

 

மத்திய ஆசியாவை அடித்தளமாகக் கொண்ட உய்குர் இஸ்லாமியர்கள், சீனாவின் வடமேற்கு எல்லைப்பகுதியில், குறிப்பாக ஷின்ஜியாங் பகுதியில் அதிகளவில் வசித்து வருகின்றனர். பொதுவாகவே உய்குர் இஸ்லாமியர்கள் மீதான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அடக்குமுறைகள் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், கடந்த சில வருடங்களாக உய்குர் இஸ்லாமியர்களை அடைத்து வைக்க தடுப்பு முகாம்கள் கட்டுவது; அவர்களின் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த கட்டாயக் கருக்கலைப்பு, கருத்தடைக்கு உட்படுத்துவது; குடும்ப கட்டுப்பாட்டுக்கு ஒத்துழைக்காத பெண்கள், ஆண்களைத் தண்டனை முகாம்களில் அடைப்பது போன்றவற்றை சீனா செய்து வருகிறது.

 

சீனாவின் இந்த நடவடிக்கைகளுக்குப் பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அமெரிக்க அதிபராக பதவியேற்றது முதல், சீனாவிற்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஜோ பைடன், சீன அதிபரோடு தொலைபேசியில் பேசும்போது, ஷின்ஜியாங் பகுதியில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவலை தெரிவித்திருந்தார். 

 

இந்தநிலையில் அமெரிக்க அரசு தற்போது வெளியிட்டுள்ள 2020ஆம் ஆண்டிற்கான மனித உரிமைகள் தொடர்பான அறிக்கையில், சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் நடப்பது, இனப்படுகொலை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில், "2021ஆம் ஆண்டில், பிரதானமாக உய்குர் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், ஷின்ஜியாங் பகுதியில் உள்ள மற்ற மத மற்றும் இன சிறுபான்மையினருக்கு எதிராகவும் இனப்படுகொலை மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் நடந்தன" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும் இந்த அறிக்கையில், “அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில், மனித உரிமைகளை மீண்டும் ஒரு மையப்புள்ளியாக மாற்ற அதிபர் ஜோ பைடன் உறுதிபூண்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து பதிவு செய்துள்ள அந்த அறிக்கை, “அமெரிக்கா, உள்நாட்டில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை எதிர்கொள்ளும் விதம், அது வெளிநாடுகளில் மனித உரிமைகள் குறித்து வாதிடுவதற்கான நியாயத்தன்மையை அளிக்கிறது" எனவும் கூறியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“20 கோடி மக்கள் முக்கியமில்லையா?” - பிரதமர் பேச்சுக்கு கபில் சிபல் காட்டம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Kapil Sibal condemn for Prime Minister's speech on about muslims

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் ராஜஸ்தானில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசுகையில், “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவியவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, கங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்று கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதனையடுத்து பிரதமர் மோடியின் இந்த பேச்சு ‘மத வெறுப்பு பேச்சு’ என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Kapil Sibal condemn for Prime Minister's speech on about muslims

அந்த வகையில், காங்கிரஸ் எம்.பி கபில் சிபல், பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “பெண்களின் சொத்துகளை ஊடுருவல்காரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் காங்கிரஸ் கொடுப்பதாக பிரதமர் மோடி பேசுகிறார். இந்த நாட்டின் 20 கோடி மக்கள் முக்கியமில்லையா? அவர்களுக்கு ஆசைகள் இல்லையா?

அரசியல் இவ்வளவு நிலைக்குத் தாழ்ந்துவிட்டது. வரலாற்றில் இது நடந்ததில்லை. அப்படி நடக்க நான் விரும்பவில்லை. உடனடியாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்க விரும்புகிறேன். தேர்தல் ஆணையம் அதைக் கண்டிக்க வேண்டும் மற்றும் பிரதமர் மோடிக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Next Story

இஸ்ரேல் மீது தாக்குதல்; ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
America announced action against Iran to incident on Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஜேனட் யெல்லன் கூறுகையில், “வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராகக் கூடுதல் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கை எடுப்போம். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் விவரங்கள் வெளியிடப்படும்” என்று கூறினார்.