ஜெய்ஷ் இ முகமது அலுவலகத்தில் அமெரிக்கா,இஸ்ரேல் தேசிய கொடிகள்...

asdfsafds

கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. இந்நிலையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட் என்ற இடத்தில் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இன்று அதிகாலை 3.30 மணிக்கு 12 மிராஜ் 2000 ஜெட் விமானங்கள் எல்லை தாண்டிச்சென்று சுமார் 1000 கிலோ வெடிகுண்டை பயங்கரவாதிகள் முகாம் மீது வீசி அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இதில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முக்கிய கமாண்டர்களுள் ஒருவரான யூசுப் அசார் கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்திய விமானப்படை வெடிகுண்டுகள் வீசி தாக்குவதற்கு முன் உளவுத்துறையால் எடுக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களின் புகைப்படங்கள் வெளியிடபட்டுள்ளது.

அதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் அலுவலகத்தின் படிக்கட்டுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் தேசிய கொடிகள் வரையப்பட்டிருப்பது அந்த புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.

pulwama attack surgical strike
இதையும் படியுங்கள்
Subscribe