Advertisment

அமெரிக்காவின் பொருளாதார போர்... சீனாவுக்கு இவ்வளவு வரியா???

trump

Advertisment

சமீப காலமாக இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் வர்த்தக போரில் இறங்கியுள்ளனர். இதனால் உலகளவில் பல நாடுகளும் பாதிப்படைகின்றன. கடந்த மாதம் கூட அமெரிக்கா சீனாவின் 16 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. சுமார் ரூ.14 லட்சம் கோடி மதிப்பிலான சீனப்பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் அறிவிப்பை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று வெளியிடலாம் என தகவல்கள் வெளியாகின.

அந்த கூடுதல் வரிப் பட்டியலில் இணைய தொழில்நுட்ப தயாரிப்புகள், மின்னணு பொருட்கள், சீன கடல் உணவுகள், கார்பெண்டரி பொருட்கள், விளக்குகள், டயர்கள், ரசாயனங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், சைக்கிள்கள், கார் இருக்கைகள் இடம் பெறும் என்று சொல்லப்படுகிறது.

இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் லிண்ட்சே வால்டர்ஸ், “சீனாவின் நேர்மையற்ற வர்த்தக நடவடிக்கைகளை ஈடுகட்டுவதற்கு தானும், தனது நிர்வாகமும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று அதிபர் ட்ரம்ப் தெளிவு படுத்தியுள்ளார்” என்று கூறியுள்ளார்.மேலும் அதில்,அமெரிக்கா நீண்ட காலமாக எழுப்பி வருகிற பிரச்சினைகளை சீனா கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

இந்நிலையில், சீனப் பொருட்கள் மீது அமெரிக்கா 10 சதவீதம் வரி விதித்துள்ளது. சுமார் 200 பில்லியன் டாலர்கள் அளவுக்கான இந்த வரி விதிப்பு செப்டம்பர் 24ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் ஜனவரியில் இருந்து இந்த வரிவிதிப்பானது 25 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

Donad trump economical war xi jinping
இதையும் படியுங்கள்
Subscribe