ஹெச்1 பி விசா பிரச்சனையால் அமெரிக்காவில் வாழும் லட்சக்கணக்கான இந்தியர்கள் வெளியேரக் கூடும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது வந்துள்ள அறிக்கையின்படி கடந்த ஆண்டில் மட்டும் 60,000 இந்தியர்களுக்கு க்ரீன் கார்டு கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் வாழும் பிறநாட்டு மக்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படுவதற்கான அடையாளமாக இருப்பது க்ரீன் கார்டு. அமெரிக்காவில் வேலை வாய்பிற்காக சுமார் 6 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். இவர்கள் அமெரிக்க நிரந்தர குடியுரிமைக்காக காத்துகொண்டிருக்கின்றனர். இந்நிலையில், கடந்தாண்டு 60,000 பேருக்கு நிரந்த குடியுரிமை வழங்கியுள்ளது அமெரிக்கா. மெக்சிக்கர்களை அடுத்து இந்தியர்கள் அங்கு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.