Advertisment

அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை சேதம் - இந்தியா கடும் கண்டனம்!

gandhi

Advertisment

இந்தியஅரசு கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு வழங்கியகாந்தி சிலை, கலிஃபோர்னியா மாகாணத்தில் நிறுவப்பட்டிருந்தது. இந்த நிலையில்கடந்த 28ஆம் தேதி இந்த சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது அமெரிக்காவாழ் இந்தியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்திற்கு மத்திய அரசு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாகஇந்தியவெளியுறவுத்துறை அமைச்சகம், "அமைதி மற்றும் நீதியின்சின்னமாகஉலகம் முழுவதும் மதிக்கப்படுபவருக்கு எதிராகஇழைக்கப்பட்ட இந்த தீங்கான, இழிவானசெயலைஇந்திய அரசு கடுமையாக கண்டிக்கிறது. வாஷிங்டன் டி.சி.யில் உள்ள இந்திய தூதரகம், இந்த விவகாரத்தை அமெரிக்க வெளியுறவுத்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்று, இதில் முழுமையான விசாரணை மற்றும் தகுந்த நடவடிக்கைக்கு எடுப்பதற்கான முயற்சியை எடுத்துள்ளது. சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் இந்த விஷயத்தை டேவிஸ் நகரம் மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

மேலும் இந்தச் சம்பவத்திற்கு இந்தியபிரதமர் மோடி, அனைத்துக்கட்சி கூட்டத்தில் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார். பட்ஜெட்கூட்டத்தொடர்தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம்நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

India America Mahatma Gandhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe