இன்றைய நவீன கால இளைஞர்களின் முதன்மை பொழுபோக்காக இருப்பது சமூகவலைத்தளங்கள் தான். அதிலும் குறிப்பாக ஃபேஸ்புக் தான் இளைஞர்கள் பாதிநேரம் தங்கள் நேரத்தை செலவிடும் முக்கிய தளமாக உள்ளது.

Advertisment

america fined facebook

இந்நிலையில் பேஸ்புக் பயன்படுத்துவர்களின் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பான விவகாரத்தில், ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 9 கோடி ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் திருடியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து திருட்டு நடந்திருப்பதை ஃபேஸ்புக் நிறுவனமும் ஒப்புக்கொண்டது. இதனையடுத்து மார்க் இதற்காக மன்னிப்பும் கேட்டார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இந்த விவகாரம் தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு இங்கிலாந்து தரவு பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு 4 கோடியே 35 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

இதனை தொடர்ந்து தற்போது அமெரிக்காவும் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது. தகவல் திருட்டு விவகாரம் தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனம் உடனடியாக 35,000 கோடி ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும் என அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இதனால் ஃபேஸ்புக் நிறுவனம் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது.