உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

உலகளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47,192 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனாவால் 9,35,189 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 1,93,989 பேர் குணமடைந்துள்ளனர்.

Advertisment

அதிகபட்சமாக இத்தாலியில் 13,155, ஸ்பெயினில் 9,387, பிரான்ஸில் 4,032, ஈரானில் 3,036 பேர் இறந்தனர். அதேபோல் இத்தாலியில் 1,10,574, சீனாவில் 81,554, ஜெர்மனியில் 77,981, பிரான்சில் 56,989 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

america coronavirus strength is increased

Advertisment

கரோனாவால் ஒரே நாளில் 1,056 பேர் இறந்ததால் அமெரிக்காவில் உயிரிழப்பு 5,107 ஆக உயர்ந்துள்ளது. இந்த நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,15,003 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 26,473 பேருக்கு கரோனா உறுதியான நிலையில் 8,878 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் அமெரிக்காவின் கனெக்டிகட் நகரில் பிறந்து ஆறு வாரமே ஆன குழந்தைக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

ஸ்பெயினில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியது. ஒரே நாளில் 8,195 பேருக்கு கரோனா உறுதியானதால் ஸ்பெயினில் பாதிப்பு 1,04,118 ஆக அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் 2,118 பேருக்கு கரோனா உறுதியான நிலையில் இதுவரை 27 பேர் உயிரிழந்தனர். அதேபோல் இலங்கையில் 146 பேருக்கு கரோனா உள்ள நிலையில் இதுவரை 3 பேர் நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,834 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302, கேரளாவில் 241, தமிழகத்தில் 124, டெல்லியில் 152, கர்நாடகாவில் 101 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 144 பேர் குணமடைந்துள்ளனர்.