அமெரிக்காவில் கரோனா பலி எண்ணிக்கை 1.70லட்சமாக உயர்ந்து, அமெரிக்க மக்களைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
உலகெங்கும் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு உட்பட பல தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டாலும் கரோனா வைரஸ் பரவலின் வேகத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதனால் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து மக்களைப் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. கரோனா பாதித்த நாடுகளின் வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் கரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 54 லட்சமாக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை மொத்தம் 1,70,019 -ஆகப் பதிவாகியுள்ளது. நியூயார்க், நியூஜெர்சி, கலிபோர்னியா ஆகிய மாகாணங்கள் பலி எண்ணிகையில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.