Advertisment

சிரியா, ஈராக்கில் அமெரிக்கா வான்வெளி தாக்குதல்!

pentagon

சிரியாவில் இயங்கிவரும் ஈரான்ஆதரவு படையினர்,சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவ நிலை மீது இந்த ஆண்டின் தொடக்கத்தில் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடி தரும்விதமாக அமெரிக்கஇராணுவம்ஈரான்ஆதரவு படை மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 17 ஈரான் ஆதரவு படையினர்பலியானார்கள். இது பைடன்பதவியேற்றவுடன் எடுக்கப்பட்ட, முதல் இராணுவநடவடிக்கையாகும்.

Advertisment

இந்தநிலையில், சிரியாவிலும் ஈராக்கிலும் உள்ள ஈரான் ஆதரவு படையினரின்செயல்பாட்டு மற்றும் ஆயுத சேமிப்பு வசதிகள் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் இராணுவ வீரர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் வசதிகள் மீது ஈரான் ஆதரவு படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக அமெரிக்க இராணுவம் இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

அமெரிக்காவின் இந்த தாக்குதலில் பலியானவர்கள்/காயமடைந்தவர்கள் எண்ணிக்கை வெளியாகவில்லை. இந்த தாக்குதல் குறித்து அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த தாக்குதல் மூலம் நிரூபிக்கப்பட்டபடி, தான் அமெரிக்க வீரர்களைப் பாதுகாக்க செயல்படுவேன் என்பதில் ஜோ பைடன் தெளிவாக இருக்கிறார்" என தெரிவித்துள்ளது.

Syria iraq iran America
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe