Advertisment

லட்சக்கணக்கில் தினசரி கரோனா பாதிப்பு  - உலகநாடுகளை மீண்டும் அச்சுறுத்தும் கரோனா அலை!

corona

உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது கரோனாபாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள இந்த கரோனாஅலைக்கு ஒமிக்ரான்பரவல் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. அமெரிக்காவில் கடந்த செவ்வாய் கிழமை 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக அமெரிக்காவில் தினசரி இரண்டரைலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தினசரி கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

மேலும் சுமார் 60,000 பேர் கரோனாவால்பாதிக்கப்பட்டு, அமெரிக்க மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர், அமெரிக்காவில் ஒமிக்ரான்அலை ஜனவரி மாத இறுதியில் உச்சத்தை தொடும் என கூறிருப்பதுகுறிப்பிடத்தக்கது.பிரிட்டனிலும் கரோனாஅலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, நேற்று ஒரேநாளில்பிரிட்டனில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 37 பேருக்கு கரோனாஉறுதியாகியுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், மக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

Advertisment

பிரான்ஸ் நாட்டிலும்கரோனாபரவல் அதிகரித்து வருகிறது. அந்தநாட்டில் முதல்முறையாக நேற்று தினசரி கரோனாபாதிப்பு இரண்டு லட்சத்தை கடந்துள்ளது. நாட்டில் நொடிக்கு இருவர் கரோனாவால் பாதிக்கப்படுவதாகவும், இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் இதற்கு முன் இருந்ததில்லை எனவும்பிரான்ஸ் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஆலிவர் வேரன் தெரிவித்துள்ளார். மேலும் டெல்டா வகை கரோனாவால்மருத்துவமனைகளில்நிலைமை கவலைக்குரியதாக இருப்பதாகவும், ஒமிக்ரான்இனிதான் தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்றும் ஆலிவர் வேரன் கூறியுள்ளார்.

pandemic france britain America
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe