ஜப்பான், இலங்கைக்கு செல்ல வேண்டாம் - குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்!

america cdc

இந்தியாவில் கரோனா பாதிப்பு தீவிரமானதால், பல்வேறு நாடுகள் இந்தியாவில் இருந்து தங்கள் நாட்டிற்குப் பயணிகள் வருவதற்குத் தடை விதித்தன. அமெரிக்காவும் இந்தியாவில் இருந்து பயணிகள் வருவதற்கு கட்டுப்பாடுகள் விதித்தது. மேலும், தங்கள் நாட்டு குடிமக்கள் யாரும் இந்தியாவிற்குச் செல்ல வேண்டாமென்றும்இந்தியாவில் இருக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக இந்தியாவைவிட்டு வெளியேறும்படியும் அந்த நாடுகேட்டுக்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக, இலங்கை, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் தங்கள் நாட்டு குடிமக்களைச் செல்ல வேண்டாம்எனதற்போது அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. இரண்டு நாடுகளிலும் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்துவருவதால் அமெரிக்கா இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் இரண்டு மாதங்களில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நிலையில், அமெரிக்கா இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

America corona virus Japan olympics srilanka
இதையும் படியுங்கள்
Subscribe